பிரபல நடிகர் பொன்னம்பலத்தின் தந்தைக்கு நான்கு மனைவிகள் என தெரியவந்துள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று நடந்த எலிமினேஷனில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் பொன்னம்பலம், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் தனது குடும்பம் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு பிறந்த ஏழாவது மகன் நான்.எனக்கு பிறகு பிறந்த நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் உறவினர்கள் என கூறும் வகையில் எங்களின் குடும்பம் மிக பெரியது என கூறியுள்ளார்.