இந்த உணவுகளை வெறும் வயிற்றில் தொட்டுக்கூட பார்க்காதீர்கள்…

1110

காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது.

வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு வெறும் வயிற்றில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது எனத் தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.சாப்பிடக்கூடிய உணவு:காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவுகளில் முட்டை சிறந்த உணவு. இதில் புரோட்டீன்கள் மற்றும் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் இதர ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது.

தர்பூசணியில் நீர்ச்சத்து வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் லைகோபைன் உள்ளது.

ஓட்ஸ் காலை உணவாக சாப்பிட ஏற்ற ஒன்று. இது ஹைட்ரோப்ளூரிக் அமிலத்தால் வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால், கொலஸ்ட்ரால் குறையும் மற்றும் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்படும்.

ப்ளூபெர்ரி பழங்களில் ஊட்டச்சத்துக்கள் வளமாக உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், இரத்த அழுத்தம் சீராக்கப்படும், மெட்டபாலிசம் மேம்படும் மற்றும் நினைவுத் திறன் மேம்படும்.

காலையில் தேனை சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் மனநிலை மேம்படும். இதனால் அன்றைய நாளில் ஒரு செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.காலை உணவில் நட்ஸை சேர்த்துக் கொள்வதன் மூலம், வயிற்றில் உள்ள pH அளவு சமநிலையாக்கப்படும் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவும்.

சாப்பிடக்கூடாத உணவு:சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பப்பளிமாஸ் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆனால் இது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றதல்ல. ஏனெனில் இது அசிடிட்டியை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

காரமான உணவுகள் உடலுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் இரைப்பையின் உட்பகுதி கடுமையாக பாதிக்கப்படும்.

வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்து, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

காலையில் பச்சை காய்கறிகளால் சாலட் தயாரித்து சாப்பிடுவது உகந்ததல்ல. இதில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த அமிலங்கள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும் மற்றும் சில நேரங்களில் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.

தக்காளியில் டானிக் அமிலம் உள்ளது. இது வயிறு மற்றும் நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தக்காளியை சாப்பிடாதீர்கள்.

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று வலி மற்றும் சளிச்சவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.