கனடாவை சேர்ந்த பெண்ணுக்கு லாட்டரியில் வாரம் $1,000 என்ற அளவில் வாழ்நாள் முழுவதும் பரிசு கிடைத்து வரும் நிலையில் பணத்தை ஏழைகளின் நலனுக்காக செலவிட்டு வருகிறார்.
ரச்சில் லேப்பியிர் (57) என்ற பெண் கடந்த 2013-ல் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அவருக்கு பம்பர் பரிசு விழுந்தது.இது மொத்தமாக ஒரு தொகை கிடையாது. வாரம் $1,000 என்ற வீதம் ரச்சிலின் வாழ்நாள் முழுவதும் பரிசு தொகை அவருக்கு கிடைத்து கொண்டே இருக்கும்.
இந்த பணத்தை ரச்சில் தனக்கென செலவு செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களுக்காக செலவு செய்து வருகிறார்.லாட்டரியில் பரிசு விழுவதற்கு முன்னால் எந்த வீட்டில் இருந்தாரோ அதே வீட்டில் தான் தற்போதும் ரச்சில் வசித்து வருகிறார்.
ரச்சில் கூறுகையில், பணத்தை வைத்து புது காரை நான் வாங்கினால் அது சில வாரங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை தரும்.ஆனால் புற்றுநோய் பாதித்த பெண்ணொருவர் தான் வறுமையில் வாடுவதாக கூறினார், அவருக்கு உணவையும், என் அன்பையும் கொடுத்தேன்.
அதற்கு ஈடு இணையான மகிழ்ச்சி எதுவும் கிடையாது. இது போல என்னால் முடிந்த உதவிகளை பல்வேறு இடங்களுக்கு சென்று செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.