இறந்த மகனை 2 வாரமாக அடக்கம் செய்ய மறுக்கும் பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம்!!

1077

அதிர்ச்சி சம்பவம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 வாரத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட இளைஞரை அவரது பெற்றோர் அடக்கம் செய்ய மறுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.

வெனிசுலா நாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக கொல்ம்பியாவில் குடியேறியவர்கள் கொல்லப்பட்ட சீசர் அலெக்சிஸ் என்ற 20 வயது இளைஞரின் பெற்றோர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொலம்பியாவில் குடியிருந்து வருவதால் உள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று உள்ளூர் நண்பர் ஒருவருடன் மது அருந்திக்கொண்டு இருவரும் கதை பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென்று அப்பகுதிக்கு வந்த ஒரு மர்ம நபர் சீசர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மார்பில் 3 குண்டுகள் பாய்ந்து சம்பவயிடத்திலேயே சீசர் கொல்லப்பட்டுள்ளார்.

டிசம்பர் 10 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து, சீசரின் பெற்றோர் தினமும் சடலத்திற்கு பிரார்த்தனை செய்து வருவதுடன், அடக்கம் செய்யவும் மறுத்து வருகின்றனர்.

கடவுளிடம் இருந்து தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும், தங்களது மகள் உயிருடன் திரும்பி வருவான் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உரிய முறையில் சடலத்தை பாதுகாத்து வருவதால், துர்நாற்றம் வீசும் என அச்சப்படத் தேவையில்லை எனவும், பொதுமக்கள் தேவையின்றி அச்சப்படுவதாகவும் சீசரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.