இலங்கையில் புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயக் குற்றி!!

334

20 ரூபா நாணயக் குற்றி…

இலங்கையின் நாணயக் கொள்கை, நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவனமான இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை முடித்து 71ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம்,

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்‌ஷ்மன் அவர்களால் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நாணயக் குற்றி 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03ம் திகதி முதல் பொதுமக்களின் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.