இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய நபர் : நடந்த கொ லை : அதிரவைக்கும் சம்பவம்!!

524

இளம் பெண்ணிடம்..

தமிழகத்தில் டிரைவரை கொ லை செய்து காரை க டத்திய வழக்கில் இளம் பெண் உட்பட நான்கு பேரை பொலிசார் அ திரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே, சாவரப்பட்டியில் உள்ள பாசன கால்வாயில், கடந்த மாதம் 15-ஆம் திகதி ஒருவர் ம ர்மமான முறையில் இ றந்து கிடந்தார்.

இதனால் இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த, கார் டிரைவர் நாகநாதன்(51) என்பது தெரியவந்துள்ளது.

குற்றாலம் செல்வதற்காக காரை, புக் செய்த சென்னையைச் சேர்ந்த ஜெயசுதா, 24, என்ற பெண் த லைமறைவானது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவரை திருச்சியில் கைது செய்தனர். அதன் பின் அவர் கொடுத்த தகவலின் படி, அவரது காதலன் ஹரிகரன், 30, பெரோஸ் அகமது, 34, ஜெகதீஷ், 24, ஆகிய மூவரை கைது செய்தனர்.

இதையடுத்து பொலிசார் கூறுகையில், ஜெயசுதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பெரோஸ் அகமது. பொருளாதார நெ ருக்கடியில் இருந்த ஜெயசுதாவிடம், காரை க டத்தி விற்று சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனால் ஜெயசுதா, புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில், தன்னுடன் வேலை செய்த ஜெகதீஷ் மற்றும் காதலன் ஹரிகரன் உள்ளிட்டோரை கூட்டாளிகளாக சேர்த்து, திட்டம் தீட்டினார்.

அதன் படி சென்னை அகர்வால் டிராவல்ஸ் நிறுவனத்தை, கடந்த மாதம் 5-ஆம் திகதி தொடர்பு கொண்டு, குற்றாலம் செல்ல வேண்டும் எனக் கூறி, காரை ஜெயசுதா, புக் செய்ய, காரை நாகநாதன் ஓட்டியுள்ளார்.

அதன் படி குற்றாலத்தில் இருந்து, கடந்த மாதம் 9-ஆம் திகதி, சென்னை திரும்பும் வழியில், கொட்டாம்பட்டி, சாவரப்பட்டி அருகே, நாகநாதனை க யிற்றால் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்து, கால்வாயில் வீசி, காரை க.டத்தி, திருச்சி சென்றனர்.

உறையூரில் காரின் கலர், நம்பர் பிளேட்டை மாற்றுவதற்காக, பெயின்டர் ஒருவரிடம் காரை விட்டனர். ச ந்தேகமடைந்த பெயின்டர், உள்ளூர் பொலிசார் கொடுத்த தகவல் தெரிவிக்க, நால்வரையும் கைது செய்தது தெரியவந்துள்ளது.