அதிர்ச்சிப் பின்னணி

இந்தியாவில் இளம் பெண்ணை அவரின் உறவினர்கள் பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் நகோல் பகுதியை சேர்ந்தவர் சண்டி. இவரின் மனைவி பத்மா. சண்டி ஐடி நிறுவனத்துக்காக கார் ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.

அந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண்ணொருவர் சண்டி மற்றும் பத்மாவுக்கு உறவுமுறையாவார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சண்டியும், பத்மாவும் தங்களது காரில் அந்த பெண்ணிடம் நைசாக பேசி தனியாக கூட்டி சென்றனர்.

பின்னர் மஹபூப் நகரில் உள்ள விபச்சார விடுதிக்கு கார் சென்ற நிலையில் தங்களது உறவுக்கார பெண்ணை அங்கு இருவரும் அழைத்து சென்றனர்.அங்கிருந்த கும்பலிடம் அந்த பெண்ணை சண்டியும், பத்மாவும் பணத்துக்காக விற்றனர்.

இதையடுத்து தங்கள் வீட்டு பெண்ணை காணவில்லை என அந்த பெண்ணின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விபச்சார விடுதியில் இருந்த அப்பெண்ணை மீட்டனர். இதோடு சண்டி, பத்மா உட்பட இதில் தொடர்புடைய 8 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்