இளம்பெண் செய்த செயலால் மனமுடைந்த இளைஞருக்கு நடந்த சோகம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

573

திருவள்ளூர்….

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

இதற்கிடையில், செந்தில்குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இந்த பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில்குமாருக்கும், இளம்பெண்ணுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, செந்தில்குமாரிடம் கடந்த 4நாட்களாக இளம்பெண் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால், அவர் மனமுடைந்து இருந்து உள்ளார். இந்நிலையில், நேற்று செந்தில்குமாரின் பெற்றோர் திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதற்கிடையில், இன்று காலை செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தார். தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.