உடன் பணி புரியும் ஆண் பொலிஸுடன் மிக நெருக்கமாக இருந்த பெண் காவலர்! வெளியாகி பரபரப்பை உண்டாக்கிய வீடியோ!

951

பெண் காவலர் ஒருவர் தன்னுடன் வேலை பார்க்கும் பொலிசாருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சமுதாயத்தில், செல்போனில் படம் பிடிக்கப்படும் அந்தரங்க காட்சிகள் வெட்டவெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

அந்த வகையில், கேரளவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு ஆண் பொலிசாருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சி வாட்சப்பில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, அந்த வீடியோக்காட்சியை பெண் பொலிஸ் தன் நண்பர்களுக்கு வாட்சப்-பில் பகிர்ந்துள்ளார். அதில், தானும் அந்த போலீஸ்காரரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த காட்சியை யாரோ மற்ற வாட்ஸ்-அப் குரூப்களிலும் பரவவிட்டதால் தற்போது அது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதைதொடர்ந்து இந்த விவகாரம் கேரள உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்

விசாரணையில், அந்த பெண் போலீஸ் மாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவது தெரிய வந்துள்ளதுஇதைதொடர்ந்து அவரை கேரளாவில் உள்ள வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் இந்த காட்சியை பரப்பியவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரின் வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ஒரு போலீஸ்காரர் தான் இந்த காட்சியை பரப்பியவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.