உயிரோடு இருக்கும் போதே உடலை அடக்கம் செய்த நபர்!!

489

இந்தியாவில் விவசாயி ஒருவர் உயிரோடு தன் உடலை அடக்கம் செய்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Mahabubabad மாவட்டத்தின் Ramannagudem கிராமத்தைச் சேர்ந்தவர் Meka Prabhakar Reddy.

விவசாயியான இவருக்கு மூன்று சகோதரர்கள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு இவர்களுக்குள் 15 ஏக்கர் நிலம் பிரிக்கப்பட்டது.

ஆனால் 2010-ஆம் ஆண்டு இவரின் சகோதரர் ஒருவர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்வதை நிறுத்திவிட்டு, நிலம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் கூறினார். எங்களுக்குள் நிலம் பிரிப்பதில் ஒரு ஒப்பந்தம் இருந்தது. ஆனால் அதை எல்லாம் அவர் ஏற்று கொள்ளவில்லை.

எனது பெயரில் அந்த நிலத்திற்குரிய 5.26 ஏக்கருக்கு ஏற்கனவே பட்டா உள்ளது. அதைப் பற்றி நான் கிராம தாசில்தாரை அணுகிய போது, அவர் அதற்கு எந்த சரியான பதிலும் கொடுக்கவில்லை, அதே போன்று உள்ளூர் எம்.எல்.ஏ ஆதரவுடன் சகோதரன் ஆடுகிறான்.

இதனால் இதற்கு மேல் என்னால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கூறி, நிலத்தில் குழி தோண்டி உயிருருடன் தன் உடலை புதைக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இறுதியில் என்ன ஆனது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. தற்போது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.