உலகத்தின் பார்வையில் தந்தை போல் நடித்து குழந்தையை அடித்தே கொன்ற ஓரினச்சேர்க்கையாளன்

657

பிரித்தானியாவின் Cardiff பகுதியைச் சேர்ந்த ஒரு ஓரினச்சேர்க்கையாளன் தன்னை ஒரு நல்ல தந்தை போல் உலகுக்கு காட்டுவதற்காக ஒரு குழந்தையை தத்தெடுத்துவிட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதை அடித்தே கொன்ற கோர சம்பவம் நடந்தேறியுள்ளது.

பொறுப்பற்ற ஒரு தாயிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு 18 மாத பெண் குழந்தையை தத்தெடுத்தான் Matthew Scully Hicks (31) என்னும் ஓரினச்சேர்க்கையாளன்.

பின்னர் அந்தக் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்துள்ளான் அவன். ஒரு முறை கால் உடைந்த அந்த குழந்தையை அவன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுகூட அவனை பொறுப்புள்ள தந்தையாகத்தான் பார்த்தார்களேயொழிய அவனை யாரும் சந்தேகப்படவில்லை.

இதேபோல் பல முறை குழந்தையை அடித்துள்ளான் அவன், ஒரு முறை குழந்தையை பலமாக குலுக்கியதில் அதன் கண்களின் உட்புறம் மற்றும் மூளையின் சில பகுதிகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டது.

நெற்றியில் காயங்கள், உடைந்த மண்டை ஓடு, உடைந்த மூன்று விலா எலும்புகள், வயிற்றுக்குள் இரத்தக் கசிவு, தொடை எலும்பு முறிவு மற்றும் கால் முறிவு என இத்தனை பிரச்சினைகள் குழந்தைக்கு ஏற்பட்டபோதும் அந்தக் குழந்தையின் தந்தை அதை சித்திரவதை செய்ததை மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

அதைவிட மோசம் அந்தக் குழந்தை சமூக சேவகர்களின் மேற்பார்வையில் வளர்க்கப்படுபவள்.இதனால் இவ்வளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு தரையில் ஓங்கி அடிக்கப்பட்டு 18 மாதங்களிலேயே அனைத்து சித்திரவதைகளையும் அனுபவித்து இறந்திருக்கிறாள் அந்த அப்பாவிக் குழந்தை.

கைது செய்யப்பட்டபோது தான் நிரபராதி என்று தெரிவித்த Matthewவுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தையை மேற்பார்வையிட வேண்டிய சமூக சேவகர்கள் குழந்தைக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்க வேண்டிய சுமார் 15 வாய்ப்புகளைத் தவற விட்டதற்காக உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.