பிக்பாஸ் சீசன் 2 மக்களிடம் சூடு பிடித்துள்ளதா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். முதல் சீசன் இருந்த அளவிற்கு இந்த சீசன் இல்லை என்பது சில மக்களின் கருத்து.
நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்கள் பற்றி மக்கள் கணித்து வருகின்றனர். அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் மஹத், தனது காதலியை மிகவும் மிஸ் செய்வதாக வருத்தப்பட்டு கூறியிருந்தார்.
அதை பார்த்த பிரபல காமெடியன் சதீஷ் தன் டுவிட்டர் பக்கத்தில், காதலியை மிஸ் செய்கிறீர்களா, உள்ளே நடப்பதையெல்லாம் பார்த்தால் அப்படி தெரியவில்லையே ராஜா என கமெண்ட் செய்துள்ளார். அவரின் அவர் பதிவிற்கு மக்களும் சரி என்பது போல் பதில் கொடுக்கின்றனர்.