ஊற்றெடுத்த கள்ளக்காதல்… கணவனை உதறிச் சென்றதால் விபரீதம்!! நடந்தது என்ன?

1205

சென்னை…..

திருவண்ணாமலை கண்ணக்குருக்கை ஊராட்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் லாரி ஓட்டும் நேரத்தை தவிர, பேஸ்புக்கில் நதியாவிடம் பேசி பொழுதை ஓட்டியிருக்கிறார். எவ்வளவு நாள்தான் ஆன்லைன் வழியே கடலை போடுவது, நேரில் பார்த்தே காதலை பகிர்ந்து கொள்வது என்று முடிவுக்கு வந்த நதியாவும், தங்கராஜும் ஒருசுபவேளையில் கள்ளக்காதலை துவக்கி உள்ளனர்.

படிதாண்டிய நதியாவின் விவகாரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பாவிக் கணவன் பார்த்தசாரதி, விவகாரம் விபத்தில் முடிவதற்குள் தடை போட்டிருக்கிறார். ஆனால் லாரி ஓட்டுநர் தங்கராஜோ வேகத்தடையை உடைத்து காதலை வளர்த்துள்ளார். ஒருகட்டத்தில் பார்த்தசாரதி, பாய்சனாக தோன்ற கணவனையும், பெற்ற பிள்ளைகளையும் அம்போவென கைகழுவி விட்டு தங்கராஜாவே உலகம் என போய் நின்றுள்ளார் நதியா.

சென்னையில் இருந்து திருவண்ணாமலை பறந்த சின்னக்குயில் வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு என கீதம் இசைத்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் தங்கராஜூக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு பேச்சுக்கு வந்து விடு என்றால், உண்மையாகவே புருஷனை விட்டு வந்து விட்டாளே என பரிதவித்திருக்கிறார்.

மேலும், தங்கராஜின் மனைவி உமாவும், இந்த செயலைக் கண்டு காரித் துப்பியதோடு, இருவரையும் கழுத்தை பிடித்து வெளியே துரத்தியடித்திருக்கிறார். நன்றாக இருந்த குடும்பத்தில் கும்மியடிப்பதற்காகவே இங்கு வந்தாயா? என நதியாவை நாராச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் தங்கராஜ்.

இப்போதே உன் கணவர் வீட்டுக்கு சென்று விடு.. இல்லையென்றால் கொன்று விடுவேன் என மிரட்டவும் செய்திருக்கிறான் அந்த தொடைநடுங்கி மன்மதன்.

அரசனை நம்பி புருஷனைக் கை விட்டு வந்தோமே என்பதை நினைத்த நதியா, தன்னை மனைவியாக்குமாறு கண்ணீர் மல்க கெஞ்சிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், கள்ளக்காதலி நதியாவின் சேலையை அவிழ்த்து, கழுத்தை சுற்றிக் இறுக்கி கொலை செய்தான்.

பெரிய கோளாப்பாடி மலைக்குன்றில் நடந்த இந்த சம்பவத்தை அறிந்து மக்கள் சென்று பார்த்தனர். அங்கு கழுத்து இறக்கப்பட்ட நிலையில் நதியாவின் சடலம் கிடந்தது.

இந்த சம்பவம் அறிந்த போலீசார், நதியாவின் சடலத்தை மீட்டதோடு, தப்பியோடிய தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற குடும்பப் பெண்ணின் நிலைமை பலருக்கும் பாடமாய் அமைந்துள்ளது.