நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி ரன்களைக் குவித்த கே.எல்.ராகுல் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.ராகுலும், இந்தி நடிகை நிதி அகர்வாலும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ராகுல் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எங்கள் நட்பு நான் கிரிக்கெட்டிற்கும், அவர் நடிப்பிற்கும் வரும் முன்பிருந்தே தொடர்கிறது.
எங்கு சென்றாலும் நண்பர்கள் 3-4 பேர் சேர்ந்து தான் செல்வோம். ஒருவேளை நான் காதலிப்பதாக இருந்தாலும் உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளிப்படையாக தான் காதலிப்பேன். நான் எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன், எதையும் மறைக்கமாட்டேன்,” என தெரிவித்துள்ளார்.