என் திருமணத்துக்கு வைரமுத்துவை இவர்கள் மூலமே அழைத்தேன் : சின்மயி!!

634

சின்மயி

வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என சின்மயி கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் சின்மயி தற்போது பேசினார்.
அதில், வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. என் திருமணத்திற்கு தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது. சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது.

#METOO மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை கூற தொடங்கியுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்; நான் வெட்கப்பட மாட்டேன் என கூறியுள்ளார்.