என் மனைவியுடன் அவர் வாழுறாரு : ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு கதறும் கணவன்!!

1328

தமிழகத்தில் காவல் நிலைய ஆய்வாளரிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரும்படி துணை காவல் கண்காணிப்பாளரிடம் கணவர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாமரை மொழியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் மனைவி தனலட்சுமி.

குடும்ப பிரச்சனை தொடர்பாக தட்டார் மடம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற ஜெகதீஷின் மனைவி தனலட்சுமியை, காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தன்வசப்படுத்திக் கொண்டு தட்டி கேட்ட தன் மீதும், உறவினர்கள் மீதும் பொய்வழக்கு போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ள கணவர் ஜெகதீஷ்.

காவல் நிலையத்திற்கு வழக்கு விசாரணைக்கு சென்ற தனது மனைவியை, காவல் ஆய்வாளர் ஆள் நடமாட்டம் இல்லாத சாலைக்கு அழைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பி கஜேந்திரனுக்கும் தனது மனைவிக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடலை வெளியிட்டுள்ளார்.

அதில் தனலட்சுமியுடன் பேசியுள்ள கஜேந்திரன் காவல் நிலையத்தில் ஆட்கள் இருப்பார்கள் தனியாக வா காரில் அழைத்து செல்கிறேன் என்று பேசியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்

இந்த செல்போன் குரல் பதிவை ஆதாரமாக கொண்டு, காவல் ஆய்வாளர் கஜேந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ள தனது மனைவியை மீட்டு தரக்கோரி சாத்தான் குளம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார் ஜெகதீசன்

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள கஜேந்திரன், ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என மறுத்துள்ளார்

புகார் தொடர்பாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா விசாரணைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, துணை காவல் கண்காணிப்பாளர் விசாரித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவலரின் மனைவி ஒருவர், தனக்கு காவல் ஆய்வாளர் கஜேந்திரன் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.