தியாகராஜன்
பிரபல பெண் புகைப்படக் கலைஞர் ப்ரீதிகா மேனன் கூறிய பாலியல் புகாருக்கு, நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன், தமது அறையின் கதவை நள்ளிரவில் இரண்டு முறை தட்டியதாகவும், ஆபாசமான வகையில் உள்ள புகைப்படங்களை தனக்கு அனுப்பியதாகவும் பெண் புகைப்படக் கலைஞர் ப்ரீதிகா மேனன் மீ டூ ஹேஷ்டேக்கில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ப்ரீதிகாவின் புகாருக்கு தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது உண்மைக்கு புறம்பானது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பதிவிட்டுள்ளதாகவும், ப்ரீதிகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது பலரும் அதேபோல் மீ டூ ஹேஷ்டேக்கில் பாலியல் புகார்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.