போராடிய சிறுமி

கூப்லி பகுதியில் அதிகமான மது போதையில் மயங்கி கிடந்த தந்தையை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 2 வயது சிறுமி எழுப்ப போராடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மது போதைக்கு அடிமையாக இருக்கும் பல ஆண்களும், பொது இடங்களுக்கு செல்லும் போது தங்களுடன் வருபவர்களை கூட மறந்துவிட்டு நடுரோட்டில் மயங்கி கிடக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் அவர்களுடன் செல்பவர்களுக்கு நேரும் துயரம், அவமானம் பற்றி அவர்கள் பெரிதாக கவலைப்படுவதில்லை.

அந்த வகையில், கூப்லி பகுதியில் தன்னுடைய இரண்டு வயது மகளுடன் பிச்சை எடுத்து வந்த சென்னம்மாசிலை என்பவர், அதிகமான மது போதையில் நடுரோட்டிலே மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அவருடைய இரண்டு வயது மகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அவரை எழுப்ப முயற்சித்துள்ளது. இந்த பரிதாப சம்பவத்தை அப்பகுதி வழியாக சென்ற ஓருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.