மத்திய அரசு விருது…..
பொதுவாகவே எந்த ஒரு திரைப்பட கலைஞர்களும் தனக்கு விருது கிடைக்க வேண்டும் என்ற முனைப்போடு இருப்பது இந்த காலகட்டத்தில் கிடையாது,
எனினும் தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி, கலைஞர்களின் திறமையை ஆதரிக்க ஒரு விருது கொடுப்பது அவர்களின் பெருந்தன்மை.
அந்த வகையில், இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவது வழக்கம். கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருதுகளை பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’, நடிகை, இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படங்கள் பெற்றுள்ளன.
மத்திய அரசின் விருதை பெற்றுள்ள இந்த இரு படங்களுமே, பாக்ஸ் ஆபிசில் தோல்வி என்பது கூடுதல் தகவல். இந்த தகவலைக் கேள்விப்பட்ட திரைநட்சத்திரங்கள் இந்த இரு இயக்குனர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.