ஒன்லைன் கிளாசுக்கு சிக்னல் கிடைக்காததால் மரத்தின் உச்சியில் இருந்து படிக்கும் மாணவர்கள்!

268

ஒன்லைன்…..

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் ஒன்லைன் மூலமாக படிப்பதற்கு போதிய சிக்னல் வசதி இல்லாததால் வித்தியாசமாக ஒரு முயற்சியை செய்து மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

வி.கே.புரம் அருகே உள்ள காரையாறு வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு செல்போன் சிக்னல் கிடைக்காததால் அங்குள்ள மைலார் காணிக்குடியிருப்பு பழங்குடியின மாணவ-மாணவிகள் ஒன்லைன் மூலம் கல்வி கற்க முடியாமல் திணறி வந்தனர்.

வனப்பகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சிக்னல் கிடைக்கிறதா என்ற பார்த்த மாணவர்கள் சொங்கமொட்டை என்ற மலை பகுதயில் உள்ள மரத்தில் உச்சிக்கு சென்றபோது செல்போனிற்கு சிக்னல் கிடைத்துள்ளது.

உடனடியாக அங்குள்ள மரத்தின் உச்சியில் கொட்டகை ஒன்றை அமைத்து தற்போது 10 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் 7 பேர் தற்போது ஒன்லைனில் பயின்று வருகின்றனர்.

தடைகளை தகர்த்து எறிந்து ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வனப்பகுதியில் மரத்தின் உச்சியில் அமர்ந்து படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.