சீனாவில் ஒயின் தயாரிப்பதற்காக ஆன்லைனில் பாம்பு வாங்கிய ஒரு பெண் அந்த பாம்பினாலேயே கடிபட்டு இறந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.Weinan என்னும் நகரத்தைச் சேர்ந்த Xiaofang என்ற அந்தப் பெண்ணின் விரலில் பாம்பு கடித்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட Xiaofang கோமாவில் ஆழ்ந்தார்.அந்த பாம்பு அபூர்வ வகையைச் சேர்ந்தது என்பதால் அதற்குரிய குறிப்பிட்ட மருந்து இல்லாத நிலையில் மருத்துவர்கள் பொதுவாக பாம்புக் கடிக்கான மருத்துவம் செய்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாம்பு கடித்து எட்டு நாட்களுக்குப் பிறகு Xiaofang பரிதாபமாக உயிரிழந்தார்.சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் ஒன்றான பாம்பு ஒயின் என்பது, பாம்புகளை ஆல்கஹாலில் மூழ்க வைத்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுவதாகும்.
இதற்கிடையில் ஒயின் தயாரிப்பதற்காக அந்தப் பாம்பை வாங்கினாலும், அதை செல்லப்பிராணியாக வளர்க்க Xiaofang முடிவு செய்திருக்கலாம் என்று அவளது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
