ஒரு நாளைக்கு 1 லட்சம் : பாலியல் தொழிலுக்கு அழைப்பு விவகாரத்தில் நடந்தவை குறித்து விவரித்த நடிகை!!

874

நடிகை ஜெயலட்சுமி டேட்டிங் ரிலேஷன்ஷிப் என்ற பெயரில் வட்ஸ் அப் மூலம் தனக்கு பாலியல் தொழிலுக்கு அழைப்பு வந்தது குறித்து சமீபத்தில் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நடந்தவை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று எனக்கு மெசேஜ் வந்தது.

தெரியாத நம்பர் என்பதால் அதனை பிளாக் செய்தேன். ஆனால், மீண்டும் அதேபோல் வேறு ஒரு நம்பரிலிருந்து பாலியல் தொழிலுக்கு வருமாறு அழைக்கும் விதமாக மெசேஜ் வந்தது.

அதில் பல பிரபலங்களின் புகைப்படங்களும் இருந்ததை பார்த்து அதிர்ந்துவிட்டேன். இதுகுறித்து புகார் தெரிவிக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தபோதுதான் நடிகைகளாக இருக்கும் என்னுடைய சகதோழிகளுக்கும் இதுபோன்ற மெசேஜ் வந்ததுள்ளது என தெரியவந்தது.

இதற்குமேலும் இதை விடக்கூடாது என என் நண்பர்கள், சக தோழிகளின் ஆதரவுடன் புகார் கொடுத்தேன். நடிகைகள் என்ற வார்த்தையே சிலரிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில் என் நடிகை தோழியின் மகளை பெண் பார்க்க வந்த ஒருவர் தனக்கு அந்த பெண் பிடித்திருப்பதாக கூறி திருமணம் ரெடியாகும் சூழலில் பெண்ணின் அம்மா நடிகை என்பதால் இறுதியில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்படி நடிகை என்பதால் சமூகத்தில் எல்லா இடங்களிலும் பாதிக்கப்படுகிறோம்.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நடிகைகள் துணிந்து நின்று முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.