ஒரு நொடியில் கொலைகாரனாக மாறிய கணவன்.. துடித்து உயிரை விட்ட மனைவி : மனதை உலுக்கிய சம்பவம்!!

1290

விழுப்புரம்…..

விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (42). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இன்று காலை ஏற்பட்ட தகராறில், சங்கர் கத்தியால் மனைவி பாக்கியலட்சுமியின் வலது பக்க தலையில் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் பாக்கியலட்சுமி நிலைகுலைந்து கிழே விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாக்கியலட்சுமி யை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சங்கர் குடித்து விட்டு வருவதால் ஏற்பட்ட பிரச்சினையா அல்லது ஏதேனும் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சினையால் கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கணவர் மனைவி பிரச்சினையில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.