ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள் : அனாதையாக நிற்கும் சகோதரர் : துயர சம்பவம்!!

524

தமிழகத்தில் பெற்றோர் இறந்து இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகாத நிலையில், மகனும் புத்தாண்டு அன்று பரிதாபமாக இ றந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த தம்பதி கௌதம சந்திரசேகரன்-செல்வி ரேணுகாதேவி. இந்த தம்பதிக்கு விக்னேஸ்வரன் (30) மற்றும் செந்தில் (26) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

கெளதம் சந்திரசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது, உ யிரிழந்தார். இவர் இறந்த அடுத்த இரண்டு மாதத்தில், செல்வி ரேணுகாதேவி ஒரு விபத்தில் பரிதாபமாக உ யிரிழந்தார்.

மூத்தமகான விக்னேஷ்வரனுக்கு திருமணம் ஆகிவிட்டதால், அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தாய், தந்தையர் இல்லாததால் அண்ணன் குடும்பத்துடன், தம்பி செந்தில் வசித்து வந்தார். செந்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புத்தாண்டு அதிகாலை உள்ளூர் நேரப்படி 1:30 மணி அளவில், பணி முடிந்து, வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே வீட்டிற்கு செந்தில் நடந்து சென்ற போது, திடீரென்று மழை பெய்து, சாலை முழுவதும் மழைநீர் தேங்கியதால்,

சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏற நினைத்து, அங்கிருந்த மண் மேட்டை நோக்கி தாண்டி குதித்த போது, எதிர்பாரதவிதாமாக அவரால் நிற்கமுடியாத காரணத்தினால், கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின் கம்பத்தை பற்றி பிடித்துள்ளார்.

அவர் பிடித்த மின்கம்பத்தில் ஏற்கனவே மின் கசிவு இருந்ததால், மின் கம்பத்தை பிடித்த அடுத்த நொடியே செந்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி து டித்து இ றந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியவந்ததால், செந்திலின் உ டலைக் கைப்பற்றிய பொலிசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த மரணங்களால் தாய், தந்தை மற்றும் சகோதரனை இழந்த மூத்த மகன் விக்னேஷ்வரன் மிகவும் வேதனையில் உள்ளார்.