ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தந்தை, மகன் : விசித்திர சம்பவம்!!

833

விசித்திர சம்பவம்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அப்பாவும், மகனும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்வதே வழக்கம்.

அதேபோல் அந்த கிராமத்தில் உள்ள ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர், 30 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் உள்ளார்.

மகன் ஜித்தீஷும் திருமணம் செய்து கொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் வாழ்த்து வந்துள்ளார். அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.

இந்நிலையில், அந்த கிராமத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் பலர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற தகவலை கேள்விபட்ட தொண்டு நிறுவனம், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இந்த குடும்பத்தினரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 30 வருட துணையுடன் வாழ்ந்த வாழ்க்கையை பேரன் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக மாறியுள்ளனர் ராம்லால் மற்றும் ஷாக்கோரி.