கணவனை ஏமாற்றி காதலனுடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த துயரம் : அவன் என்ன செய்தான் தெரியுமா?

840

தமிழகத்தில் கணவனை ஏமாற்றி காதலனுடன் சென்ற மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் பீளமேட்டைச் சேர்ந்த தம்பதி சேகர்-பார்வதி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். அவருக்கும் திருமணம் நடைபெற்று, மகன் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் பார்வதியின் வீட்டில் கார் டிரைவராக இருந்த ஈஸ்வரன் என்பவருக்கும், பார்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது.

இந்த விடயம் கணவரான சேகருக்கு தெரியவர, உடனடியாக இதை கண்டித்துள்ளார். இதனால் பார்வதி தன்னுடைய காதலனுடன், ஓட்டம் பிடித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார். இதையடுத்து பார்வதி மீது இருந்த ஆசை ஈஸ்வரனுக்கு குறைந்ததால், அவர் உடனடியாக தன்னுடைய மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பார்வதி வீட்டைவிட்டு ஓடி வரும் போது பணம், நகைகள், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை எடுத்து வந்துவிட்டார். தன்னிடம் உள்ள நகைகள், சொத்துக்களை விற்று ஈஸ்வரனுடன் ஜாலியாக இருந்துள்ளனர்.

ஈஸ்வரன் விட்டுச் சென்றதால், ஆத்திரமடைந்த பார்வதி, ஈஸ்ரன் வீட்டுக்குச் சென்று, தன்னிடம் வாங்கிய ஒன்றரைக் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார்.

ஆனால் பணத்தைத் திருப்பித் தர மறுத்த ஈஸ்வரன், தனது மனைவி மற்றும் மைத்துனருடன் சேர்ந்து பார்வதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து பார்வதி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையறிந்த ஈஸ்வரன் குடும்பத்தினர், பார்வதியை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி, குமாரபாளையம் காவல்நிலையம் முன்பு உடலில் மண்ணெண்னையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.

இதைப்பார்த்த பொது மக்களும் பார்வதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.