கணவனை நெருங்கிய 9 அடி நீள சுறா : இர த்தமான கடல் தண்ணீர் : கர்ப்பிணி மனைவி எடுத்த முடிவு!!

304

9 அடி நீள சுறா..

கணவனை ப யங்கர சுறா மீன் ஒன்று நெருங்குவதைக் கண்ட மனைவி ஒருவர், தான் கர்ப்பிணி என்பதைக் குறித்துக்கூட கவலைப்படாமல் கடலுக்குள் கு தித்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த Andrew Eddy (30), தன் மனைவி Margot Dukes-Eddy மற்றும் அவரது குடும்பத்தினருடன் படகு ஒன்றில் சென்றிருக்கிறார்.

கடலில் நீந்துவதற்காக நீச்சல் உபகரணங்களுடன் Andrewவும் மற்றும் சிலரும் கடலில் இறங்க, கர்ப்பிணியான Margot படகில் இருந்திருக்கிறார்.

அப்போது திடீரென Andrew நீந்திக்கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் இரத்தமாக மாற, அங்கு ஒரு சுறா மீனின் துடுப்பு தெரிவதைக் கவனித்துள்ளார் Margot.

உடனே, தான் ஒரு கர்ப்பிணி என்பதையும் யோசிக்காமல் கடலில் குதித்திருக்கிறார் Margot. அந்த சுறா Andrewவின் தோளை பலமாக கவ்விப்பிடித்திருக்கிறது.

கடலில் குதித்த Margot, கணவனை அந்த சுறாவிடமிருந்து மீட்டதோடு, தானும் அதனிடம் சிக்காமல் பத்திரமாக கணவனை படகுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். கரைக்கு திரும்பியதும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் Andrew மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிறன்று நடந்துள்ள நிலையில், அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. அத்துடன் Margot எத்தனை மாத கர்ப்பிணி என்பதைக் குறித்த தகவலும் இல்லை.