துருக்கியில் கணவரின் கள்ளதொடர்பை ரொமான்ஸ் நாவல் மூலம் தெரிந்து கொண்ட மனைவி கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.36 வயதான பெண் சமீபத்தில் நாவல் ஒன்றை வாங்கி படித்துள்ளார்.
பெண் எழுத்தாளர் எழுதிய அந்த நாவல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாகும்.அதில், தனது கணவர் எழுத்தாளர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
புத்தகமானது எழுத்தாளருக்கும், ஒரு ஆணுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விளக்கிய நிலையில் அதில் எழுதப்பட்டுள்ள முக்கிய விடயங்களை வைத்து அது தனது கணவர் என்பதை அவர் மனைவி கண்டுப்பிடித்துள்ளார்.
இதை பின்னர் உறுதியும் செய்து கொண்ட மனைவி தனது வழக்கறிஞர் மூலம் கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.விவாகரத்தோடு அந்நாட்டு பணமான liras-வில் 100,000-தை நஷ்ட ஈடாகவும், அதோடு மாதம் 3000 liras-ஐ தனது இரு குழந்தைகள் செலவுக்கு வழங்க கோரியும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.