இந்தியாவில் கணவரும், அவர் சகோதரரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் பெண் உயிரிழந்துள்ள நிலையில் அது தற்கொலையா அல்லது கொலையா என விசாரிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் மிராகாங்கோ ராய் (37). இவர் மனைவி பயில் சக்கரபோர்டி (33).இவர்களுடன் ராயின் அம்மாவும், சகோதரர் மிருதுலும் (42) ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
ராய்க்கும், பயிலுக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் ஆரம்பம் முதலே பயிலை ராயும், மிருதுலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பயில் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பயிலின் சடலத்தை கைப்பற்றிவிட்டு அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றியுள்ளார்கள்.
கடிதத்தில் கணவர் மற்றும் மிருதுல் செய்த கொடுமையை பயில் எழுதியுள்ளதாக தெரிகிறது.இதனிடையில் பயிலை ராயும், மிருதுலும் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக பயில் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தூக்கில் தொங்கிய பயிலின் முகத்தில் இரத்தம் உறைந்துள்ளதை வைத்து அவர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
தற்கொலைக்கு முன்னர் பயில் எழுதிய கடிதம் மற்றும் அவர் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் ராய் மற்றும் மிருதுலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பயில் செல்போனில் சில ஆடியோ பதிவுகளையும் கைப்பற்றியுள்ள பொலிசார் இது கொலையா தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.