கணவருக்கு முறைகேடாக ஐந்து குழந்தைகள்: பிரபல கிரிக்கெட் வீரர் பற்றி மனைவி திடுக்கிடும் தகவல்

850

இம்ரான்கான் முன்னாள் மனைவி ரெஹம் கான் எழுதியுள்ள சுயசரிதைப் புத்தகத்தில் இம்ரானுக்கு சட்ட விரோதமாக 5 குழந்தைகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கான் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக்கிண்ணத்தை வென்றது.இதன்பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

இவர் மூன்று முறை திருமணம் செய்தவர். இந்நிலையில் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரெஹம் கான் தன் சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார்.அதில், இம்ரான்கானுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. முறை தவறி அவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

அதில், சில குழந்தைகள் இந்தியப் பெண்களுக்குப் பிறந்தவை என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, இம்ரான்கான் தன் தேர்தல் வாக்குமூலத்தில் தனக்கு சட்டபூர்வமாக இரண்டு குழந்தைகள் உள்ளன எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.