வட இந்தியாவில்………

சாலையோரங்களில் நாம் அதிக அளவிலான பழக்கடைகளைப் பார்த்திருப்போம். பெரிய, பெரிய கடைகளை விட அவர்களிடம் விலை குறைவு என்பதால் மக்களும் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அப்படியான ஒரு கடையில் நடக்கும் தில்லாலங்கடி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

குறித்த இந்தக் காட்சி வட இந்தியாவில் நடந்துள்ளது. இதில் சாலையோரம் வாலிபர் ஒருவர் திராட்சைப் பழம் விற்கிறார். அதைப் பாரத்துவிட்டு அதிகமான மக்கள் வாங்க வருகிறார்கள். ஆனால் இந்த வியாபாரி கொஞ்சம் அழுகலான பழங்களை அவரே பேக் செய்து தன் கால் அருகில் வைத்துக் கொள்கிறார்.

தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அவர்களே பழத்தை தேர்ந்தெடுத்து கையில் எடுத்துக் கொடுக்கிறார்கள். அவற்றை எடை போட்டு அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தன் கால் அருகில் வைத்திருக்கும் அழுகத் தொடங்கிய அல்லது நன்கு பழுத்த பழங்களை வசமாக மாற்றிக் கொடுத்துவிடுகிறார்.
C
கண் இமைக்கும் நேரத்தில் மிக, மிக லாவகமாக யாரும் பார்க்காமல் இதை செவ்வனே செய்கிறார் அந்த சாலையோர வியாபாரி. இதைப் பார்த்த பின்னர் இனி சாலையோர வியாபாரிகளிடம் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டுய்ம் எனத் தோன்றுகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.