கண்பார்வையற்ற மாணவிக்கு தேர்வெழுதிய பிரபல நடிகர் : வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு!!

1409

குவியும் பாராட்டு

இந்தியாவில் கண்பார்வையற்ற மாணவிக்காக தேர்வெழுதிய பிரபல நடிகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தெலுங்கில் இளம் நாயகனாக முன்னேறி வருபவர் தான் தனிஷ். இவர் தெலுங்கில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

ஆனால் அதே நிகழ்ச்சியில் அவர் நெகட்டிவ் இமேஜில் சிக்கிக் கொண்டார். இதனால் மக்கள் மனதில் அவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 சிக்கியதில் இவரும் ஒருவர்.

இந்த நெகட்டிவ் இமேஜையெல்லாம் மறக்கும் அளவிற்கு அவர் ஒரு மிகப் பெரிய உதவி செய்து, தற்போது மக்கள் மனதில் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

கண்பார்வையற்ற மாணவி தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளதால் அந்த மாணவியில் தேர்வுக்கு உதவுமாறு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட நடிகர் தனிஷ் தான் அந்த மாணவிக்காக தேர்வு எழுத முன் வந்தார்.

அதன் படி தேர்வு எழுதிக் கொடுத்து மாணவியை வெற்றி பெறச் செய்ததோடு மக்களின் இதயங்களையும் வென்றெடுத்துள்ளார். அந்த மாணவிக்கு பண உதவியையும் அளித்துள்ளார். இதை கண்ட இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.