கதறி அழுதபடி ரயில் முன் நின்ற இளம்பெண் : அடுத்த சில நொடிகளில் நடந்த திகிலூட்டும் காட்சி!!

720

இந்தியா…

இந்தியாவில் மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன் நின்ற இளம்பெண்ணை கடைசி நொடியில் ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோவில், ரயில் வரவிருப்பதால் சாலையின் இருபுறமும் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க வேலி போடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தண்டவாளத்தை கடக்க காத்திருந்த ஆட்டோவில் இருந்த நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது, வேலிக்கு அருகில் முகத்தை துப்பட்டாவில் முகத்தை மூடிய படி நின்றுக்கொண்டிருந்த இளம்பெண், ரயில் அருகே வந்துவிட்டதை அறிந்து திடீரென வேலியை கடந்து தண்டவாளத்தில் சென்று நிற்கிறார்.

இளம்பெண் வேலியை கடந்து செல்வதை பார்த்த அ.திர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர், உடனே அப்பெண் பின்னாலே சென்று வலுக்கட்டயமாக இழுத்து வர, மின்னல் வேகத்தில் ரயில் கடந்து செல்கிறது.

கா.ப்பாற்றப்பட்ட இளம்பெண் கதறி அழ சம்பவயிடத்தில் கூடிய பெண்கள் அவருக்கு ஆறுதல் செல்கின்றனர்.