கனடாவில் உருவான திடீர் பள்ளம்… ஏலியன் சினிமாவில் வருவதுபோல் இருந்த ஒளிர் பச்சை நிற திரவம்: வெளியான புகைப்படங்கள்!!

390

கனடாவின்………..

கனடாவின் ஒன்ராறியோவில் சாலை ஒன்றில் திடீர் பள்ளம் ஒன்று ஏற்பட்ட நிலையில், அதற்குள் ஏலியன் சினிமாக்களில் வருவது போல் ஒளிர் பச்சை நிரவ திரவம் நிறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, அந்த பச்சை நிற திரவம் தங்களுக்கு ஹல்க் மற்றும் Teenage Mutant Ninja Turtles ஆகிய படங்களை நினைவூட்டியதாக சமூக ஊடகங்களில் செய்திகளை பகிர்ந்தார்கள் மக்கள்.

ஆனால், அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சாலையில் இதுபோல் பள்ளம் ஏற்படும்போது, அந்த பள்ளம் சாலைக்கடியில் உள்ள கழிவுநீர் குழாயுடன் இணைந்துள்ளதா என்பதை அறிவதற்காக பச்சை நிற சாயம் ஒன்றை அந்த பள்ளத்திற்குள் கொட்டுவார்களாம்.

இது வழக்கமான ஒரு செயல்முறைதான் என்று கூறியுள்ள அதிகாரிகள், விரைவில் அந்த பள்ளத்தை சரி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.