கர்ப்பிணி பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

567

ஆந்திராவை சேர்ந்த பால் வியாபாரி நமா புசிசாராஜூ என்பவரின் மாடு மர்ம நபர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது.

3 மாதம் கர்ப்பிணியாக இருந்து மாடு, திடீரென காணாமல் போயுள்ளது. பசு மாடு காணாமல் போனது என்று காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, காவல்துறை, தேடுதலில் அந்தப் பசுமாடு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாடு ஒரு மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தது.

மாட்டின் பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர், பசுமாட்டை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர், மாடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் அறிந்ததும், கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர், குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் உறுதி அளித்ததையடூத்து கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.