கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!

1275

இந்தியாவில் குழந்தை கண்முன்னால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் உமேஷ் குப்தா. இவர் மனைவி ஜோதி (26). தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் ஜோதி மீண்டும் கர்ப்பமானார்.

குடிபழக்கத்துக்கு அடிமையான உமேஷ் அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை மீண்டும் உமேஷுக்கும், ஜோதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த உமேஷ் கர்ப்பிணி என்றும் பாராமல் ஜோதியின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொன்றுள்ளார்.பின்னர் தனது மணிக்கட்டை கத்தியால் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த தம்பதியின் குழந்தை அழுதுள்ளது.அழுகை சத்தம் கேட்டு அருகிலிருந்த உறவினர்கள் வந்து பார்த்த போது இருவரும் கீழே கிடந்துள்ளனர்.

உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஜோதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

உமேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உமேஷும், ஜோதியும் அடிக்கடி பணம் தொடர்பான விடயத்துக்காக சண்டை போட்டு கொள்வார்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.