கர்ப்பிணிப்பெண் ஒருவரை வயிற்றில் எட்டி உதைத்ததால் அவர் துடிதுடித்து குழந்தை பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ambar Pacheco (26) என்னும் பெண் பொலிஸ் எட்டு மாத கர்ப்பிணி ஒருவரை வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.அதனால் கடும் வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண் உடனடியாக குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்.
வடக்கு மியாமி கடற்கரையில் பொலிசாக பணி புரியும் Ambar Pacheco உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது கர்ப்பிணிப்பெண் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விசாரணையின் தனது சகோதரியை அந்த கர்ப்பிணிப்பெண்ணின் ஆண் நண்பர் முகத்தில் மிதித்ததால் பதிலுக்கு அந்த கர்ப்பிணியைத் தாக்கியதாக Ambar Pacheco தெரிவித்தார்.