கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

1308

அங்கமாலி….

அங்கமாலி தீயணைப்பு நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி இன்று உயிரிழந்தார்.

இந்த விபத்தில் இறந்தவர் புளியணத்தைச் சேர்ந்த தெலப்பள்ளி சஜன் என்பவரின் மகள் அனு சஜன் (21) என அடையாளம் காணப்பட்டார்.

அனு தனது நண்பர்களுடன் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார்.

இவர் அங்கமாலி மார்னிங் ஸ்டார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் இறுதியாண்டு படித்து வந்தார்.

கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.