கள்ளக்காதலியால் தெருவுக்கு வந்த பைனான்சியர் : மாடல் சுவாதி வழக்கில் பகீர் தகவல்!!

1275

சென்னை…..

சென்னை, பூந்தமல்லி முத்து நகரை சேர்ந்தவர் . இவருக்கு 40 வயதாகிறது. பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சேகர் தனது தம்பி ராஜேஷ் (37) அவரது குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமான வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். சேகரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு மனம் திருந்தி கணவன் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, அவர் பீரோவில் வைத்துவிட்டு சென்ற 300 சவரன் நகைகளை மாயமாகியிருந்தது. மேலும், ராஜேஷின் மனைவி நகை 200 சவரன் மற்றும் 50 சவரன் கொண்ட தங்க கட்டிகள் என அனைத்தும் மாயமகி இருந்தது.
விநாயகர் சதுர்த்திக்கு தயாராகுங்கள்: விநாயகர் சிலைகள், அலங்காரங்கள், பூஜைக்கு தேவையான பொருட்கள், வீட்டு அலங்காரம் மற்றும் பலவற்றை

இதுகுறித்து, பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில், சேகர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கேட்டபோது, நகை திருடுப்போயிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சேகர் நகையை திருடி நாடகமாடியது தெரியவந்தது. மேலும், விசாரணையில், வேளச்சேரி, கேசரிபுரம் மெயின்ரோட்டில் வசிக்கும் மாடல் அழகி ஸ்வாதி (22) என்ற இளம்பெண்ணுடன் சேகருக்கு தொடர்பு ஏற்பட்டதும் பின்னர், அது கள்ளக்காதலாக மாறி இருவரும் கோவா, ஊட்டி என பல ஊர்களுக்கு இன்ப சுற்றுலா சென்று வந்ததும் தெரிய வந்தது.

மற்ற நாட்களில் போரூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சுவாதியுடன் தனிமையில் இருக்கும்போதெல்லாம் சேகர் தனது மனைவி நகைகளை அவருக்கு போட்டு அழகு பார்த்து வந்துள்ளார். சேகர் வசதியானவர் என்பதால் எப்படியாவது அவர் மூலம் பணம், நகைகளை சம்பாதித்து கொள்ளலலாம் என திட்டமிட்டுள்ளார். ஸ்வாதி அழகில் மயங்கிய சேகரும் வீட்டில் இருந்த நகையை சிறுக, சிறுக என கொடுத்து, அவருக்கு போட்டு அழகு பார்த்தார்.

இந்த உண்மை தெரிந்து, போலீசார் சேகர், ஸ்வாதி ஆகியோரை கைது செய்தனர். அவருக்கு பரிசாக தந்த கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், ஸ்வாதி கைதாகி சிறையில் உள்ளார். நாம் எப்போது வேண்டுமானலும் மாட்டிக்கொள்வோம் என எண்ணிய ஸ்வாதி, ஏற்கனவே 100 சவரன் நகையை, அவரின் பாய்பிரண்ட் அரும்பாக்கத்தை ஜெர்ரி என்பவரிடம் தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சேகரிடம் இருந்து கிடைத்த நகைகளை வைத்து சுவாதி தனது ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து செலவழித்து வந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஜெர்ரியை தேடி வருகின்றனர். அவரோ, போலீசுக்கு பயந்து, ஓடி, ஓடி ஒளிந்து வருகிறார். தனிப்படையும், அவரை விடாமல் துரத்துகிறது. ஓரிரு நாளில்,ஜெர்ரி சிக்கிவிடுவார், அவரிடம் உள்ள மீதமுள்ள நகையை பறிமுதல் செய்துவிடுவோம் என முத்துவேல் பாண்டியன் தெரிவித்தார்.