கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இருபெண்கள் : ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

568

ஐஎஸ் பயங்கரவாதிகள்

மொரோக்கோவில் இருபெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.

நார்வே நாட்டை சேர்ந்த 28 வயதான மார்ன் யூலண்ட் மற்றும் அவருடைய பல்கலைக்கழக தோழியும் டென்மார்க்கை சேர்ந்தவருமான லூயிஸா ஜெஸ்பர்சன் (24) கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயமாகினர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், வடக்கு ஆப்பிரிக்காவின் டூவல்கலின் மிக உயர்ந்த சிகரத்திற்கு செல்லும் வழியில் ஒரு தனிமையான கிராம பகுதியில், இருவரையும் சடலமாக கண்டெடுத்தனர்.

அவர்கள் இருவரும் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தனர். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 3 ஆண்கள் கைது செய்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், இவர்கள் மூவருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என டேனிஷ் உளவுத்துறை வியாழனன்று செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் நான்கு பேர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், அது அல்லாஹ்வின் விருப்பம். அவர்கள் கடவுளின் விரோதிகள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு மன்னிப்பு கிடையாது என கூறுகின்றனர். இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நான்கு நபர்களில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் உள்ளனரா என்பது சரியாக அடையாளம் காணப்படவில்லை.

ஆனால் கொலை செய்வதற்கு முன் பயங்கரவாதிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி தான் அந்த வீடியோவாக இருக்கும் எனவும், கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ளது எனவும் டேனிஷ் உளவுத்துறை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.