கவுரி லங்கேஷ் தொடர்ந்து பிரபல நடிகரை கொலை செய்யப்போகும் கொலையாளிகள்- வெளியான திடுக்கிடும் தகவல்

672

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி பத்திரிக்கையாளர் மற்றும் செயற்பாட்டாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து கர்நாடக சிறப்பு புலனாய்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

பின் கொலை வழக்கு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு கொலையாளியிடம் இருந்து ஒரு டைரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இனி அடுத்து யாரை கொலை செய்ய வேண்டும் என்ற பட்டியலில் பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட்டின் பெயர் இடம் பெற்றுள்ளது.

நடிகர் கிரிஷ் கர்னாட் கமல்ஹாசனுடன் ஹேராம் படத்தில் நடித்தவர். காதலன், ரட்சகன், மின்சார கனவு உள்பட பல படங்களிலும் நடித்து இருக்கிறார், இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.