காசுக்காக இப்படியுமா செய்வது.. நடிகை திஷா பாட்னியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

864

நடிகை திஷா பாட்னி

தோனி படம் , குங்பூ யோகா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இளம் ரசிகர்கள் பலரை ஈர்த்தவர் நடிகை திஷா பாட்னி. அவர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது, ஆனால் அந்த படம் இன்னும் துவங்கவே இல்லை.

சமீப காலமாக திஷா பாட்னி இன்ஸ்டாகிராமில் மிக கவர்ச்சியாக பிகினி புகைப்படங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று வெளியிட்ட வீடியோ அவரை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது. ஒரு விளம்பர வீடியோவில் நடித்துள்ளார் திஷா பாட்னி. அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டால் ஒரு குறிப்பிட்ட தொகை நடிகைக்கு வழங்கப்படும்.

அந்த விளம்பரத்தின் இயக்குனர் நடிகைக்கு அந்த விடியோவை பார்ப்பதற்காக அனுப்பிவைத்துள்ளார். அடுத்து அனுப்பும் விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுங்கள் என அவர் ஈமெயிலில் கூறியுள்ளார்.

ஆனால் திஷா பாட்னி அதை கூட கவனிக்காமல் அப்படியே அந்த ஈமெயிலை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.