காதலி இறந்த துக்கம் தாங்காமல் இளம் இயக்குநர் எடுத்த சோக முடிவு!!

807

இளம் இயக்குநர்

சென்னை விருகம்பாக்கத்தில் தனது காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் இயக்குநர் தற்கொலை செய்துகொண்டார். 23 வயதான மணி என்பவர் பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இவர் சில நாட்களாக தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் தனது வீட்டில் மணி, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். டிப்ளமோ படித்துள்ள மணி, சினிமாத்துறையில் சேர வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக ஏராளமான கதைகளை எழுதி வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணி இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பது கிடைத்தது அதில் “நீ இல்லாத உலகில் என்னால் வாழ முடியவில்லை” என்று எழுதியிருந்தார்.

மணி அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அதில் இருந்து மணி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். எனவே காதலி இறந்த துக்கம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.