காதலித்து திருமணம் செய்த மனைவியை திருமண நாளில் சரமாரியாக குத்தி கொலை செய்த கணவன்!!

921

தமிழகத்தில் பெற்றோரிடம் பணம் வாங்கி தராத காரணத்தினால், மனைவியை கணவன் சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி, பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் மதுமிதா (23).பி. இ பட்டதாரியான இவர், தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளனர்.அதன் பின் மதுமிதா சென்னையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாகவும், வெங்கடேஷ் தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனால் மதுமிதா திருமணத்தின் போது போடப்பட்ட 33 சவரன் நகையை தனது பெற்றோரிடம் கொடுத்து 7 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கணவரிடம் கொடுத்துள்ளார்.

அதோடு மதுமிதாவின் பெயரில் லோன் போட்டு 7 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அதை வைத்து இடம் வாங்கிய அவர் மதுமிதாவின் பெயரில் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

ஒப்பந்தம் செய்த இடத்தை பதிவு செய்வதற்கு மதுமிதாவிடம், உனது பெற்றோரிடம் சென்று 7 லட்சம் ரூபாய் வாங்கி வா என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.

ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, வெங்கடேஷ் தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார்.

நேற்று திருமண நாள் என்பதால், சென்னை வந்த வெங்கடேஷ், மனைவியின் ஒரு மாத சம்பளமான 1 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார்.

அவர் கொடுக்க தவறியதால், ஆத்திரத்தில் வெங்கடேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மதுமிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது மதுமிதா இறந்துவிட்தாகவும், வெங்கடேஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பொலிசாருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டதால், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.