தஞ்சை..

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12 வது படிக்கும் மாணவியும், காரியாபட்டியை சேர்ந்த 17 வயது மாணவனும்,

திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மாணவன் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது காதலியை தேடி அவரது சொந்த ஊரான அக்கரைவட்டம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாக மாணவன் மாணவியின் வீட்டு அருகே நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் யார் என்ன என விசாரித்துள்ளனர்.

இதில் தான் மாணவியை காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருவதாகவும் அவரை பார்ப்பதற்காக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நள்ளிரவில் மாணவன் மற்றும் மாணவி இருவருக்கும் அங்கு உள்ள முருகன் கோயிலில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கரைவட்டம் கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

மாணவனின் வீட்டார்கள் வருவதற்குள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று மணக்கோலத்தில் இருந்ததை பார்த்து மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவனின் தந்தை தேவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில்.

மேலும் அக்கரைவட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர்.