80 வயது பாட்டியை காதலிக்கும் இளைஞர்

தனது பாட்டி வயது பெண் ஒருவரை காதலிக்கும் இளைஞர் ஒருவர், நான் அவரது உடலைப் பார்க்கவில்லை, உள்ளத்தைப் பார்க்கிறேன் என்று சினிமாவில் வருவது போல வசனம் பேசுகிறார்.

பேஸ்புக்கில் என்னென்னவோ கண்றாவிகள் நுழைந்துள்ளன, அதில் இந்த பொருந்தாக் காதலும் ஒருவகை.

வயது வித்தியாசமே இல்லாமல், அப்பா வயது ஆணை இளம்பெண்களும், பாட்டி வயது பெண்ணை ஆண்களும் காதலிக்க, தாய் மகன், தந்தை மகள் என்ற உறவு முறையே காணாமல் போய்விடும்போலிருக்கிறது (வெளிநாடுகளில்).

அப்படித்தான் பேஸ்புக்கில் சந்தித்த 35 வயது எகிப்தியரான முகமது அகமது இப்ராகிமுக்கும், பிரித்தானியாவைச் சேர்ந்த 80 வயது ஐரிஸ் ஜோன்ஸ் என்ற பெண்மணிக்கும் காதல் வந்திருக்கிறது.

இந்த லட்சணத்தில், சந்தித்த முதல் முறையே இருவரும் பாலுறவு வைத்துக்கொள்ள, அடுத்த நாள் தன்னால் நடக்கவே முடியவில்லை என்கிறார் பாட்டி!

ஐரிஸ் பாட்டியின் மகளான டாரன் (53)! தன் தாயிடம், கவனமாக இருக்குமாறும், அந்த பையன் உங்கள் பணத்துக்காகத்தான் உங்களைக் காதலிப்பதாகத் தோன்றுகிறது என்றும் எச்சரிக்க, ஐரிசோ, தன்னிடம் ஒரு வீடு மட்டுமே இருப்பதாகவும், தான் முதியோர் பென்ஷனில்தான் வாழ்கிறேன் என்பதையும் ஏற்கனவே தன் காதலரிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

போதுமான சேமிப்பு இல்லாததால் முகமதுக்கு பிரித்தானிய சுற்றுலா விசா கிடைக்கவில்லை. ஆகவே, ஐரிஸ் எகிப்துக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். திருமணத்துக்குப்பின் முகமதுக்கு பிரித்தனியாவில் வாழிட உரிமம் கிடைக்காவிட்டால், இந்த ஜோடி எகிப்தில் சென்று குடியேற இருக்கிறார்களாம், கலிகாலம்!