காதல் கணவனும், கடவுள் கொடுத்த குழந்தையும் இறந்தது தெரியாமல் இருக்கும் மனைவி!!

838

பாலாபாஸ்கர்

கேரள இசையமைப்பாளரும், வயலின் கலைஞருமான பாலாபாஸ்கர் கடந்த மாதம் 25 ஆம் திகதி தனது குடும்பத்துருடன் கார் விபத்தில் சிக்கியதில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலாபாஸ்கரின் மறைவுக்குப் பல ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரை நல்லடக்கம் செய்யும்போது பாலாபாஸ்கருக்கு மிகவும் பிடித்தமான வயலின் கருவியும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

இந்த கோர விபத்தில், பாலாபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், படுகாயமடைந்த பாலாபாஸ்கரின் மனைவி லஷ்மி சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவர் மற்றும் குழந்தை தேஜஸ்வினி இறந்த செய்தி அவரின் மனைவி லக்ஷ்மிக்கு இன்னும் தெரியாது. லக்ஷ்மி தொடர் சிகிச்சையில் இருப்பதால் தற்போது இந்த விஷயத்தை அவரிடம் தெரிவிக்க மறுத்துள்ளனர் பாலாபாஸ்கரின் உறவினர்கள்.

கடந்த 2000-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட பாலாபாஸ்கருக்கு லஷ்மி தம்பதியினருக்கு 16 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. கடவுள் கொடுத்த வரமாக கடந்த 2016 ஆம் ஆண்டு மகள் தேஜஸ்வினி பிறந்தார்.

ஆனால், காதல் கணவன் மற்றும் குழந்தை உயிரிழந்தது தெரியாமல் மனைவி லஷ்மி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.