காதல் மனைவியை அடித்து கொன்ற கணவன் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

268

மதுரை….

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். சதீஷ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இரு குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மனைவியை அவதூறாக பேசியுள்ளார். அப்போது கணவன், மனைவி இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த கணவர் சதீஷ்குமார் அருகில் இருந்த பொருளால் மனைவி சித்ராதேவியை தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து படுகாயங்களுடன் இருந்த மனைவி சித்ராதேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் மனைவியை கொலை செய்த கணவன் சதிஷ்குமாரை கைது செய்த நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.