சில நிஜக் கதைகள் ஹாரர் சினிமாக்களின் கற்பனையையும் மிஞ்சி விடுகிறது. சிறுமிகள் தங்கும் விடுதியில் நடந்திருக்கும் இந்த கொடூர கதையும் அப்படித்தான்!
மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சமர் பித்தது.
இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.
இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை இன்று வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது.