சாலை விபத்தில்
கேரளாவில் சாலை விபத்தில் பிரபல பாடகர் பாலா பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கிய நிலையில் அவரின் மகள் உயிரிழந்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான பாலா பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வினியுடன் கேரளாவின் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார். காரை பாஸ்கரின் கார் ஓட்டுனர் அர்ஜூன் ஓட்டினார்.
கோவிலில் சாமி தரிசனம் முடிந்து அவர்கள் பள்ளிப்புரம் அருகில் வந்த போது கார் வேகமாக மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த நால்வரும் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சிறுமி தேஜஸ்வினி உயிரிழந்துள்ளார். பாஸ்கரும், லட்சுமியும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கார் ஓட்டுனர் அர்ஜூனுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து விசாரித்து வரும் பொலிசார், ஓட்டுனர் அர்ஜூன் காரை இயக்கும் போது தூங்கியிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.